Tuesday, August 31, 2021

'Ponniyin Selvan' படப்பிடிப்பு தளம்: த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்!

'Ponniyin Selvan' படப்பிடிப்பு தளம்: த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்!

Tuesday, August 31, 2021 • தமிழ்



பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பை ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோர் முடித்துவிட்டதாக ஏற்கனவே தகவல் வெளி வந்த நிலையில் தற்போது நர்மதை நதியின் ஆற்றங்கரையில் காதல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் குந்தவை வேடத்தில் நடித்து வரும் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளம் குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். நர்மதை ஆற்றங்கரையில் உள்ள இந்த இடத்தில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.



மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் நகரில் உள்ள ஒன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அரண்மனைகள் மற்றும் கோயில்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்து வரும் கார்த்தி மற்றும் குந்தவை கேரக்டரில் நடித்து வரும் த்ரிஷாவின் காதல் காட்சியின் படப்பிடிப்பு நர்மதை நதிக்கரையில் நடந்ததாக த்ரிஷாவின் புகைப்படத்தில் இருந்து ஊகிக்க முடிகிறது.

No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...