Tuesday, September 7, 2021

அள்ளுதே! நம்ம Action King படத்துல Aishwarya Rajesh ஹீரோயின்!! அடுத்த தரமான சம்பவம்!

அள்ளுதே! நம்ம Action King படத்துல Aishwarya Rajesh ஹீரோயின்!! அடுத்த தரமான சம்பவம்!

Sep 07, 2021 

GS ARTS தயாரிப்பாளர் G.அருள் குமார் வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன் இயக்கும் புத்தம் புதிய  Crime Thriller திரைப்படத்தில் Action King Arjun,  Aishwarya Rajesh முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



நடிகர் Arjun Action, Crime படங்களுக்கு பெயர் பெற்றவர். அவர் நடித்த  Crime & Action படங்களின் பிரமாண்ட வெற்றிகளை தொடர்ந்து, Action King பட்டத்தை பெற்றவர். அவரது தொடர் Thriller படங்களின் வெற்றிகளை தொடர்ந்து, புதிதாக மீண்டும் ஒரு வித்தியாசமான Crime Thriller படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை Aishwarya Rajesh இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இந்த படம் குறித்து GS ARTS தயாரிப்பாளர் G.அருள் குமார் கூறும்போது, “இது ஒரு Crime-Thriller Investigation கதை. Action King Arjun இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இது மன இறுக்கம் கொண்ட  ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட  திரைப்படம். இந்த படத்தில் Aishwarya Rajesh முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய  பிரபலங்கள்  நடிக்கின்றனர்.

அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாபாத்திரமாகும். இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன், இந்த திரைக்கதையை முதன்முதலில்  விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன்.  திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும்  பார்வையாளர்களுக்கு,  நீண்ட காலத்திற்குப் பிறகு Crime-Thriller Investigation வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும். நடிகர் Arjun இந்த வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இப்படம் அதிலிருந்து மாறுபட்டு,  தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்” என்றார்.


இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, GS ARTS சார்பில் தயாரிப்பாளர் G.அருள் குமார் தயாரிக்கிறார். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, பரத் ஆசீவகன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, அருண் சங்கர் துரை கலை இயக்குநராகவும், விக்கி ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணிபுரிகின்றனர். சுரேஷ் சந்திரா மக்கள் தொடர்பு பணிகளை செய்கிறார்.


No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...