Monday, September 6, 2021

Karthi-க்கு ஜோடியாகும் Director shankar-ரின் மகள்! Industry-யை கலக்கும் வேறலெவல் போஸ்டர்!

Karthi-க்கு ஜோடியாகும் Director shankar-ரின் மகள்! Industry-யை கலக்கும் வேறலெவல் போஸ்டர்!

Sep 06, 2021 

Director Shankar பிரம்மாண்ட இயக்குநர் என்று திரைத்துறையில் அறியப்படுபவர். ஜெண்டில்மேன் திரைப்படத்தில் Arjun-னை இயக்கிய Shankar, பல படங்களை இந்திய திரையுலகம் வியந்து மற்றும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் இயக்கினார். 




பிரம்மாண்ட படங்களாகவும் அதிர்வை உண்டுபண்ணும் படங்களாகவும் ஜெண்டில்மேன் படத்தைத் தொடர்ந்து இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் என Shankar இயக்கிய பல திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் வெகுஜன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. 




இந்நிலையில் தான் Director shankar-ரின் மகள் Aditi shankar Actor Karthi நடிப்பில் முத்தையா இயக்கும் விருமன் எனும் திரைப்படத்தில் நாயகியாக தோன்றவிருக்கிறார்.

இது தொடர்பான போஸ்டர் வெளியாகி திரைத்துறையையே அதிரவைத்துள்ளதுடன், ரசிகர்களிடம் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.



Shankar-ரின் மகள் Aditi Shankar-ரை பெரும்பாலானோர் பார்த்ததில்லை என்கிற நிலையில் அவரை பலரும் இந்த போஸ்டர் மூலமாக அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். அத்துடன் இந்த படத்தை Surya-வின் 2டி Entertainment தயாரிக்கிறது.

வரும் September 18-ல் Theni-யில் தொடங்கப்படவுள்ள இந்த படப்பிடிப்புக்கிடையே, இப்பட பூஜையில் நடிகர் சிவகுமார், திருமதி. லக்‌ஷ்மி சிவகுமார், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் ஷங்கர். திருமதி ஈஸ்வரி ஷங்கர், பிருந்தா சிவகுமார், தயாரிப்பாளர் எஸ்.தானு, தயாரிப்பாளர்கள் KE.ஞானவேல் ராஜா, SR.பிரகாஷ்பாபு , SR.பிரபு, இயக்குநர்கள் பாலா, லிங்குசாமி, சிறுத்தை சிவா, சுதா கொங்காரா, பாண்டிராஜ், ஜெகன், த.செ.ஞானவேல், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் எஸ்.கே.செல்வகுமார், சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு, இப்படத்தின் கலை இயக்குநர் ஜாக்கி, போஸ்டர் டிசைனர் நந்தகுமார் மற்றும் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.






Yuvan Shankar Raja இந்த படத்துக்கு இசையமைக்கிறார், மாநகரம் புகழ் எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு சண்டைப் பயிற்சி அளிக்கிறார் என்பன போன்ற அதிகாரப்பூர்வ தகவல்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளதால் படத்தை காண ரசிகர்களால் காத்திருக்க முடியவில்லை என்றே சொல்லலாம்.  

No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...