Wednesday, September 15, 2021

கடைசியாக Rajini-க்கு SPB பாடிய "அண்ணாத்த" படத்தின் முதல் Song எப்போ Release?

கடைசியாக Rajini-க்கு SPB பாடிய "அண்ணாத்த" படத்தின் முதல் Song எப்போ Release?

  

Rajini - S.P.பாலசுப்ரமணியம் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றது.




Super Star Rajini படங்களின் Introduction பாடல்களை S.P.பாலசுப்ரமணியம் பாடுவதை ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்த்திருப்பர். கடந்த ஆண்டு September 25 அன்று Corono, நுரையீரல் செயலிழப்பு காரணமாக மரணமடைந்தார். இறப்பதற்கு சில நாட்கள் முன் "அண்ணாத்த" படத்திற்காக, D.Imman இசையில் Rajini-யின் துவக்க பாடலை பாடி கொடுத்துள்ளார் பாடகர் S.P.பாலசுப்ரமணியம்.



இந்நிலையில் இந்த பாடல் வெளியாகும் நாள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பாடகர் S.P.பாலசுப்ரமணியத்தின் முதலாமாண்டு நினைவு நாள் வரும் September 25ஆம் நாள் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. அந்நாளில் "அண்ணாத்த" படத்தின் First Single வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




தற்போது இந்த படத்தின் Post Production வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் Diwali-க்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே Production நிறுவனம் அறிவித்துள்ளது. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு Rajinikanth நடிக்கும் அண்ணாத்த படத்தின் First Look Poster, Motion poster வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.



 

Super Star Rajinikanth நடிப்பில் "அண்ணாத்த" படத்தை Sun Picture நிறுவனம் தயாரிக்கிறது. Rajinikanth-துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.

No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...