Wednesday, September 15, 2021

LATEST: Sivakarthikeyan நடிக்கும் 'DON' படத்தின் இயக்குனரே சொன்ன First Look Poster அப்டேட்!

Sivakarthikeyan நடிக்கும் 'DON' படத்தின் இயக்குனரே சொன்ன First Look Poster அப்டேட்!

Sep 15, 2021


'அயலான்', 'டாக்டர்' படங்களை தொடர்ந்து நடிகர் Sivakarthikeyan நடிக்கும் புதிய படம் 'DON'.



இந்தப் படத்தை LYCA நிறுவனத்துடன் இணைந்து Sivakarthikeyan Production நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை Atlee-யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் Anirudh இசையமைக்கிறார். 'DOCTOR' படத்திற்கு பிறகு Sivakarthikeyan-னுக்கு ஜோடியாக Priyanka Arul Mohan நடிக்கிறார். இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.



இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால், கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டது. பின் சமீபத்தில் மீண்டும் பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடைப்பெற்று வருகிறது.



இந்நிலையில் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி டிவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை இட்டு, பர்ஸ்ட்லுக் போஸ்டருக்கான போட்டோ சூட் முடிந்ததாகவும், விரைவில் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். டியூனி ஜான் இந்த படத்தின் போஸ்டரை வடிவமைக்கிறார். இவர் புஸ்பா, ஜகமே தந்திரம், மாறன் படங்களின் போஸ்டரை வடிவமைத்தவர் ஆவார்.




No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...