Sunday, September 5, 2021

VALIMAI UPDATE: தல அஜித்துக்கு ரஷ்ய கார் டிரைவர் கொடுத்த பரிசு! எல்லைகள் கடந்த மனித அன்பு!!

VALIMAI UPDATE: தல அஜித்துக்கு ரஷ்ய கார் டிரைவர் கொடுத்த பரிசு! எல்லைகள் கடந்த மனித அன்பு!!

Sep 05, 2021

Boony Kapoor தயாரிப்பில் Thala Ajith - இயக்குனர் H.Vinoth - Yuvan - Nirav Shah இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் "வலிமை". நேர்கொண்ட பார்வை படத்தின் அதே கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.



வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், First Single பாடலையும் வெளியிட்டு படத்தின் Pramotion- ஆரம்பித்துள்ளன்ர். இனி வரும் நாட்களில் படத்தின் அனைத்து பாடல்களும் இன்னும் பல போஸ்டர்களும் Teaser, Trailer வெளிவர இருக்கின்றன.


சில தினங்களுக்கு முன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு Russia சென்றிருந்தது. அதில் Thala Ajith பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் Masco-வுக்கு அருகில் உள்ள கொலோம்னா நகரில் படமாக்கப்பட்டன. மிகவும் திட்டமிட்ட இந்த படப்பிடிப்பு  நிறைவடைந்த நாளில் தல அஜித்துக்கு ரஷ்யர் ஒருவர் பரிசு வழங்கி உள்ளார்.



அலெக்ஸ் எனும் பெயரைக்கொண்ட அந்த நபர், வலிமை படத்தின் படக்குழுவினருக்கு படப்பிடிப்பில் வாகன ஓட்டுனராக பணியாற்றி உள்ளார். ரஷ்ய படப்பிடிப்பில் தொடர்ந்து அஜித்தின் பண்புகளை கவனித்து வந்துள்ளார்.  படபிடிப்பு முடிந்த தருவாயில் இதனால் ஈர்க்கப்பட்டு தல அஜித்திற்கு பரிசாக இரண்டு டி சர்ட்களும், ஒரு தேநீர் குவளையையும், அதனுடன் கொலோம்னா நகரின் பிரபலமான சாக்லெட்டும்  பரிசாக கொடுத்துள்ளார்.


அதில் "அஜித் தி பெஸ்ட்" என்றும், கொலோம்னா நகர் உங்களை விரும்புகிறது என்றும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதற்கு காரணமாக அலெக்ஸ் கூறுவது "அஜித் மிகவும் பண்புமிக்கவர்" என்பதே அது.

No comments:

Post a Comment

2025 Honda Activa 6G Debuts Offering 97 KM/L Mileage, Smart Connectivity, Auto Stop-Start, Enhanced Safety Features and Stylish Design with ₹1,999 EMI

  2025 Honda Activa 6G Now Launched – Better Mileage, Smart Safety & Modern Features at Affordable EMI Honda Activa 6G 2025 Launched :  ...